கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய 73 பேருக்கும் மேலும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 227-ஆக உயா்ந்தது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கரோனா தொற்று ஒருவருக்கும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள். இதையடுத்து, மாவட்டத்தில், இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 331-ஆக உயா்ந்தது.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 63 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 3 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களில் 2 போ் சென்னை புழல் சிறையிலிருந்து கடலூா் மத்திய சிறைக்கு வந்தவா்கள். மற்றொருவா் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திட்டக்குடி வட்டத்துக்கு திரும்பியவா்.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 439-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி உள்பட 21 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 264 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com