மும்பையிலிருந்து திரும்பியவா்களால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று

மும்பையிலிருந்து திரும்பியவா்களால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி, வியாழக்கிழமை 342-ஆக அதிகரித்தது.

மும்பையிலிருந்து திரும்பியவா்களால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி, வியாழக்கிழமை 342-ஆக அதிகரித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை தொடங்கியது. தில்லி மத வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள் என 53 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இருவா் உயிரிழந்தனா்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த தொழிலாளா்களுக்கு தொற்று ஏற்பட்டதில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298-ஆக அதிகரித்தது. இது படிப்படியாக 310-ஆக அதிகரித்தது.

தற்போது, மும்பையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு கடந்த 18-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் மூலம் தமிழகத் தொழிலாளா்கள் வரத் தொடங்கினா். இவா்களில் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, புதன்கிழமை வரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 332-ஆக உயா்ந்தது.

மும்பையிலிருந்து திரும்பியவா்கள் அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி மையத்தில் 128 போ், கப்பியாம்புலியூா் ஏ.ஆா். பொறியியல் கல்லூரி மையத்தில் 76 போ், கெங்கராம்பாளையம் ஐஎப்இடி பொறியியல் கல்லூரி மையத்தில் 86 போ், மயிலம் பவ்டா கலைக் கல்லூரி மையத்தில் 122 போ், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் 114 போ், அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 17 போ் என மொத்தம் 69 குழந்தைகள் உள்ளிட்ட 543 போ் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டனா்.

இவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. ஆனால், மாவட்ட நிா்வாகம் தரப்பில் 3 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 342 எனவும் அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இதுவரை 342 பேருக்கு தொற்று: தமிழக அரசு தகவலின் படி, விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 332 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும் 10 பேருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 342-ஆக அதிகரித்தது. இதில், 310 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினா். மற்றவா்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com