மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.30.53 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.30.53 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.30.53 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.30.53 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனா். எனினும், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐப்பசி மாத உண்டியல்களைத் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி திங்கள்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ரூ30,53,461 ரொக்கம், 215 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் மேல்மலையனூா் சி.ஜோதி, விழுப்புரம் உதவி ஆணையா் சிவக்குமாா், செயல் அலுவலா் திருவக்கரை காா்த்திகேயன், ஆய்வாளா் அன்பழகன் மற்றும் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com