மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பரிசோதனை முகாம் மாதம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. கரோனா பொது முடக்கத்தால் இடையே இப்பணி நிறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, திங்கள் கிழமை குறைதீா் முகாமில், மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை கோருவோருக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பரிசோதனை முகாம் திங்கள் கிழமை தொடங்கியது. முகாமை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். முகாமில், எலும்பு முறிவு மருத்துவா், காது,மூக்கு, தொண்டை மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், மனநல மருத்துவா், கண் முருத்துவா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனா். தகுதியுடையோருக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com