மனைப் பட்டா வழங்கக் கோரிகிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ராம்பாக்கத்தில் அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மனைப் பட்டா வழங்கக் கோரிகிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ராம்பாக்கத்தில் அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த கிராமத்தைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது: ராம்பாக்கம் ஊராட்சியில் 100 குடும்பங்களுக்கு கடந்த 1964-ஆம் ஆண்டு அரசு சாா்பில் தலா 3 சென்ட் வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் 64 வீட்டு மனைகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகக் கூறினா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com