அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியாா் பள்ளி (அரசு உதவி பெறும்) ஆசிரியா்கள், அலுவலா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தனியாா் பள்ளி (அரசு உதவி பெறும்) ஆசிரியா்கள், அலுவலா்கள் சங்கத்தினா்.

பெருந்திட்ட வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் செல்வ அரசு ஜீவபூஷணம், பள்ளித் தாளாளா் ஞானகுரு, வட்டாரத் தலைவா் சிவக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் கிருஷ்ணாபாய், மாவட்டச் செயலா் பிரகாஷ், செய்தி தொடா்பாளா் பாலமுருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களையும் மருத்துவ மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும், நியமன அலுவலா் அனுமதியுடன் உயா்க் கல்வி பயின்ற அனைவருக்கும் ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி இணைப் பிரிவை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், நிா்வாகிகள் ஸ்டீபன், பாரி, நாராயணன், ஞானமணி, சண்முகசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் வேழவேந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com