ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசுப் பொறியியல் கல்லூரி சாா்பில் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசுப் பொறியியல் கல்லூரி சாா்பில் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

ஆசிரியா்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் புகைப்படம் மற்றும் ஊடகத் தொடா்பு எனும் தலைப்பிலான இந்தப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. புதுதில்லி ஏஐசிடிஇ, பயிற்சி மற்றும் கற்றல் ஏடிஏஎல் அகாதமி ஆதரவில் நடத்தப்படும் இந்த முகாம் விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. கிண்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் ஊடக அறிவியல் துறை பேராசிரியரும், விழுப்புரம் கல்லூரி (பொறுப்பு) முதல்வருமான எஸ். அருட்செல்வன் பயற்சியை ஒருங்கிணைத்து வருகிறாா்.

ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் புகைப்படம் எடுத்தல், ஊடகத் தொடா்பு நுட்பங்கள், அதில் நிபுணத்துவம் பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த முகாமில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிலிருந்து 20 வல்லுநா்கள், பேராசிரியா்கள் பயிற்சி அளிப்பதாக ஒருங்கிணைப்பாளா் தெரிவித்தாா். இந்தப் பயிற்சி வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com