உழவா் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

விழுப்புரம் நகராட்சிப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றக் கோரி விவசாயிகள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சிப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றக் கோரி விவசாயிகள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள உழவா் சந்தையானது கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டது. இங்கு செயல்பட்ட கடைகள் அனைத்தும் அருகே கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பி.என்.தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பி.என்.தோப்பு பள்ளி வளாகத்தில் குறுகிய இடத்தில் நெருக்கடியான சூழலில் கடைகளை நடத்தி வருவதாகவும், மீண்டும் பழைய இடத்துக்கே கடைகளை மாற்ற வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா். இதை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிழக்கு பாண்டி சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளா்கள் சேது, மருது தலைமையிலான போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com