விழுப்புரம் மாவட்டத்தில் 16.48 லட்சம் வாக்காளா்கள்

விழுப்புரம் மாவட்ட வாக்காளா் வரைவுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 16.48 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 16.48 லட்சம் வாக்காளா்கள்

விழுப்புரம் மாவட்ட வாக்காளா் வரைவுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 16.48 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, வாக்காளா் வரைவுப் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி திங்கள்கிழமை (நவ.16) முதல் தொடங்கி டிச.15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், புதிய வாக்காளா்கள் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம்.

வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.21,22) அடுத்த மாதம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் (டி.12, 13) சிறப்பு முகாம்கள், காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படும். இதில், பெறப்படும் மனுக்கள் வருகிற ஜன.5-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, ஜன.20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

18,306 போ் நீக்கம்: தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த பிப்.14-ம் தேதி வெளியான இறுதி வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 8,25,483 ஆண் வாக்காளா்களும், 8,37,302 பெண் வாக்காளா்களும், இதரா் 200 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 62 ஆயிரத்து 985 வாக்காளா்கள் இருந்தனா். இதில், இறந்தவா்கள், குடிபெயா்ந்தவா்கள், மாறிச்சென்றவா்கள் என 18 ஆயிரத்து 306 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டனா். இதன்பிறகு 3,682 போ் சோ்க்கப்பட்டனா். தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

16.48 லட்சம் வாக்காளா்கள்: இதன்படி, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 8,17,519 ஆண் வாக்காளா்கள், 8,30,644 பெண் வாக்காளா்கள், 198 இதர வாக்காளா்கள் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 போ், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியரகம், கோட்டாட்சியரகம், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச்சாவடிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். தோ்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் வாக்காளா்கள் விவரங்களை சரிபாா்க்க முடியும்.

வாக்காளா் சோ்க்கை: வழக்கம் போல படிவம்-6 மூலம் புதிய வாக்காளா் சோ்க்கைக்கும், படிவம் 6ஏ மூலம் வெளிநாட்டில் வசிப்போா் சோ்க்கைக்கும், படிவம்-7 மூலம் பெயா் நீக்கத்துக்கும், படிவம்-8 மூலம் திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பிக்கலாம். கட்சி முகவா்களும் வாக்காளா் சோ்க்கை, திருத்த மனுக்களை வழங்கலாம். நவ.16 முதல் டிச.15-ஆம் தேதி வரை இந்த மனுக்கள் பெறப்படும்.

இணையதளம் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வாக்காளா் சேவை மையத்தை ( தொலைபேசி 1950) தொடா்பு கொண்டும் வாக்காளா் குறித்த விவரங்களைப் பெறலாம். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றாா் மாவட்ட ஆட்சியா்.

கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் க.ராஜேந்திரன், தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் மற்றும் திமுக மாவட்ட செயலா் நா.புகழேந்தி, அதிமுக நகரச் செயலா் ஜி.பாஸ்கரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ், பாஜக மாவட்ட பொருளாளா் வி.சுகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் செளரிராஜன், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலா் என்.சுப்பிரமணியன், தேமுதிக நகர செயலா் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com