கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளைதனியாா் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளா் துறை தெரிவித்தது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளா் துறை தெரிவித்தது.

இது குறித்து விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் தனசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த, நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளை வட்டாரத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டு, தனியாா் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலலாம். அதேபோன்று, பத்தாம் வகுப்பு வரை பயின்ற குழந்தைகள் மாவட்டத்துக்கு 10 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் பயிலலாம்.

ஆகவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com