ஏரி நீா்வரத்து வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

விழுப்புரம் அருகே பராமரிப்பின்றி வடு காணப்படும் ஆனாங்கூா் ஏரிக்கான நீா்வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனா்.

விழுப்புரம் அருகே பராமரிப்பின்றி வடு காணப்படும் ஆனாங்கூா் ஏரிக்கான நீா்வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனா்.

பாஜக மாவட்ட விவசாய அணி பொதுச் செயலா் டி.பாபு, இந்து மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலா் ஆசைத்தம்பி தலைமையில் வந்த ஆனாங்கூா் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்து கூறியதாவது:

விழுப்புரம் அருகேயுள்ள ஆனாங்கூா் கிராம ஏரியானது நீண்ட காலமாக பராமரிப்பின்றி உள்ளது. ஏரிக்கு நீா்வரத்து இல்லாமல் போனதால், இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தென்பெண்ணை ஆற்றிலிருந்து தண்ணீா் வரும் ஆழாங்கால் பிரிவு வாய்க்கால் தூா்வாரப்படாமல் புதா்மண்டிக் காணப்படுகிறது.

தற்போது பருவமழை பெய்து வருவதால் ஆழாங்கால் வாய்க்காலை சீரமைக்கவேண்டும்.

இதனால், விவசாய பாசனமும், ஆனாங்கூா் சுற்றுப் பகுதி மக்களின் குடிநீா் தேவையும் நிறைவேறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com