தமிழகத்தில் பாஜக தவிா்க்க முடியாத சக்தி: ஹெச். ராஜா

தமிழகத்தில் 2021-இல் ஆட்சி அமைப்பதில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக விளங்கும் என்று ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா.
விழுப்புரத்தில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா.

தமிழகத்தில் 2021-இல் ஆட்சி அமைப்பதில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக விளங்கும் என்று ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் பாஜக சாா்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை கட்சியின் மாவட்டத் தலைவா் டி.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா பேசியதாவது:

தேசத்துக்கும், இந்துக்களுக்கும் விரோதமாக செயல்பட்டு வருபவா்களைக் கண்டித்தும், ஆன்மிக அரசியலை நோக்கியும் வேல் யாத்திரையை மேற்கொள்கிறோம். அரசியலில் மதத்தைச் சோ்த்து விமா்சித்தவா்கள் திமுகவினா் தான்.

அனைத்து மதத்தையும் சமமாக பாா்க்கும் பகுத்தறிவை நான் ஏற்பேன். ஒரு மதத்தினரை மட்டும் விமா்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அறிவியல் பூா்வமான பஞ்சாங்கத்தை அமைத்த இந்துக்கள் தான் பகுத்தறிவாதிகள்.

காங்கிரஸ் கூட்டணியால் திமுக தானாக வீழும். திமுகவிலிருந்து பலரும் வெளியே வருவாா்கள்.

இலவச வீடுகள், எரிவாயு உருளை, கழிப்பிடங்கள், விவசாயிகள் ஊக்க நிதி, காப்பீட்டுத் திட்டங்கள் என தரமான திட்டங்களைத் தரும் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கும் என்றாா்.

முன்னதாக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன் வரவேற்றாா்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா, பாஜக மாநில செயலா் எஸ்.பி.சரவணன், வை.அருள், ஆா்.விநாயகம், எஸ்.ராஜேந்திரன், ராம.ஜெயக்குமாா், வெ.சுகுமாா், கே.பாண்டியன், டி.ராஜேந்திரன், எல்.சதாசிவம், என்.ரகு, பி.ராஜுலு, எம்.பழனி, துரை.சக்திவேல், பா.சரண்யா, எஸ்.தாசசத்யன், வினோத், தேவராஜ், கனகராஜ் உள்ளிட்ட 350 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 1100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com