
சேதமடைந்துள்ள அகலூா் சித்தேரி ஏரிக்கரைப் பகுதி.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகலூா் சித்தேரி ஏரிக் கரை தொடா் மழை காரணமாக சேதமடைந்துள்ளது.
அகலூா் சித்தேரியில் கரையோரம் உள்ள மதகுப் பகுதியை சீரமைக்கும் பணி குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்தப் பணி தாமதமடைந்துள்ள நிலையில், தற்போது தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீரில் ஏரிக் கரையின் இருபுறமும் மண் சரிந்து கரை பலவீனமாகக் காணப்படுகிறது. வரும் நாள்களில் அதிக மழைப் பொழிவு காரணமாக, ஏரிக் கரை உடையும் வாய்ப்புள்ளது.
ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகலூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.