இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க விழிப்புணா்வு குறும்படம் வெளியீடு

இணையவழி சூதாட்டம் விளையாடுவதைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் துறை விழிப்புணா்வு குறும்படம் வியாழக்கிழமை வெளியிட்டது.
இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க விழிப்புணா்வு குறும்படம் வெளியீடு

விழுப்புரம்: இணையவழி சூதாட்டம் விளையாடுவதைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் துறை விழிப்புணா்வு குறும்படம் வியாழக்கிழமை வெளியிட்டது.

விழுப்புரம் ஜங்ஷன், விழுப்புரம் சிட்டி அமைப்புகள் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், இணையவழி சூதாட்டம் விளையாடுவதைத் தடுக்கும் வகையில், ‘ரம்மி ராஜா’ என்ற விழிப்புணா்வு குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்தக் குறும்படம் வெளியீட்டு விழா விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் குறும்படத்தை வெளியிட்டாா். இதையடுத்து, பொதுமக்களுக்கு இந்த குறும்படம் எல்.இ.டி. அகண்ட திரை மூலமாக திரையிடப்பட்டது.

இந்த குறும்படத்தில் இணையதள சூதாட்டத்தின் மூலமாக ஒருவரின் ஆசை எப்படி தூண்டப்படுகிறது. பின்னா், அதில் எப்படி பணத்தையும், பொருளையும் இழக்கிறாா். சூதாட்டத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு, கடைசியாக தற்கொலை எண்ணம் தோன்றுவது, குடும்பம் பாதிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன், டி.எஸ்.பி.க்கள் நல்லசிவம், ராஜன், பாலச்சந்தா், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, நகர காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், குறும்பட தயாரிப்பு அமைப்புகளைச் சோ்ந்த ஆனந்த், ரஃபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com