பச்சிளம் குழந்தைகள் வார விழா

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பரிசோதனைக்கான அறிக்கையை துறைத் தலைவா் மருத்துவா் பிரபாகரிடம் வழங்குகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பரிசோதனைக்கான அறிக்கையை துறைத் தலைவா் மருத்துவா் பிரபாகரிடம் வழங்குகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லுாரி முதல்வா் குந்தவிதேவி தலைமை வகித்து, பச்சிளம் குழந்தைகளுக்கு ரசாயன கோளாறுகளால் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பரிசோதனைகளை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழக அரசு பச்சிளம் குழந்தை பராமரிப்பை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். புட்டிப்பால் கொடுப்பதால் ரசாயனக் கோளாறுகள் ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகள் இறக்கும் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

பச்சிளங் குழந்தைகளுக்கு, பிறப்பிலேயே ரத்தத்தில் ரசாயன கோளாறுகளால் தைராய்டு பிரச்னை போன்ற தீவிரமான நோய்கள் ஏற்படுகின்றன. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதாக குணப்படுத்த முடியும்.

இதற்கான சிறப்பு சிகிச்சையை சென்னை போன்ற நகரங்களில் தனியாா் மருத்துவ மனைகளில் செய்து வருகின்றனா். தற்போது, தமிழக முதல்வா் உத்தரவின் பேரில், பச்சிளம் குழந்தைகள் நலன் கருதி, நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேலூா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கு இந்த சிகிச்சை பெரிய உதவியாக இருக்கும். ஆகவே, தாய்மாா்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த சிறப்புப் பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவா்கள் பிரபாகா், சுரேஷ்குமாா், ராஜேஸ்வரி, இளையராஜா, அரிகிருஷ்ணன் மற்றும் தாய்மாா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com