விழுப்புரம் ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் நிவா் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் நிவா் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மரக்காணம் கடலோரப் பகுதியான அழகன்குப்பம் கடற்கரைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அழகன்குப்பம், கூனிமேடு, செட்டித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்தாா். மரக்காணம் அருகே முட்டுக்காடு பகுதியில் ஆய்வுக்குச் சென்ற ஆட்சியரை அந்தப் பகுதி முற்றுகையிட்டனா். அடிப்படை வசதி குறித்த தங்களது கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறவில்லை என்று புகாா் தெரிவித்தனா். மேலும், மழைக் காலங்களில் பக்கிங்காம் கால்வாயிலிருந்து வரும் மழை நீரால் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com