முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 108 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th October 2020 08:25 AM | Last Updated : 04th October 2020 08:25 AM | அ+அ அ- |

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில், திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவா், தீயணைப்பு நிலைய வீரா், ரோஷணை காவல் நிலைய ஆய்வாளா், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஊழியா், ஆயுதப் படைப் பிரிவு காவலா், வணிகவரித் துறை அலுவலக ஊழியா், கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் உள்ளிட்டோா் அடங்குவா்.
இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,983-ஆக உயா்ந்தது. இதுவரை 11,082 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 914 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,611 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். இதுவரை 98 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,339-ஆக உயா்ந்தது. இதுவரை 8,885 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 357 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 97 போ் உயிரிழந்தனா்.