தனிப் பிரிவு போலீஸாா் பணியிடமாற்றம்
By DIN | Published On : 04th October 2020 08:32 AM | Last Updated : 04th October 2020 08:32 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தனிப் பிரிவு போலீஸாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பட்டாபிராமன் விழுப்புரம் உள்கோட்ட தனிப் பிரிவுக்கும், ரோஷனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சீத்தாபதி திண்டிவனம் உள்கோட்ட தனிப் பிரிவுக்கும், கோட்டக்குப்பம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஞ்சீவி கோட்டக்குப்பம் உள்கோட்ட தனிப் பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
அதேபோல, ரோஷனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலு பிரம்மதேசம் காவல் நிலைய தனிப் பிரிவுக்கும், சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலா் அக்தா்பாஷா நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய தனிப் பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.