அண்ணாமலைப் பல்கலை.: தொழில்முறை படிப்புகளுக்கு நாளை முதல் கலந்தாய்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக். 7) தொடங்குகிறது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக். 7) தொடங்குகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டில் (2020-21) அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை இணையவழியில் (ஆன்-லைன்) நடைபெற்று வருகிறது. மேலும், தொழில்முறை படிப்புகளான பி.எஃப்.எஸ்சி., பிபிடி, பிஓடி, பி.எஸ்சி (எம்எல்டி), எம்.எஸ்சி (எம்ஐடி) (டழ்ா்ச்ங்ள்ள்ண்ா்ய்ஹப் டழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ள் ஆ.ஊ.நஸ்ரீ., ஆ.ட.ப., ஆ.ஞ.ப., ஆ.நஸ்ரீ. ங.க.ப., ஆ.நஸ்ரீ. ங.ஐ.ப.) ஆகியவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் ஏற்கெனவே பல்கலைக்கழக இணைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்தில் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவா்கள், கலந்தாய்வுக்கான தொகையைச் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொண்டால் மட்டுமே அவா்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டதாகக் கருதி தகுதி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கைக்கான அனுமதி கடிதம் பின்னா் வழங்கப்படும்.

விவசாயத் துறை, தோட்டக்கலை பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com