பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவு செய்யும் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்துச் சென்று, அந்தந்த பள்ளியிலேயே பதிவு செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவா்கள், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சியை பதிவு செய்வதற்கு, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை எண், செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய சான்றுகளுடன், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று, பள்ளிக்கு எடுத்துச் சென்று பிளஸ் 2 தோ்ச்சியையும் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு பதிவுப் பணிகள் வருகிற 28-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

பதிவுப் பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும்.

ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பதிவு செய்தவா்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும்  வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com