நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை அமோகம்

நவராத்திரி விழாவையொட்டி, விழுப்புரத்தில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, விழுப்புரம் காந்தி சிலை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, விழுப்புரம் காந்தி சிலை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

நவராத்திரி விழாவையொட்டி, விழுப்புரத்தில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி விழா சனிக்கிழமை (அக்.17) தொடங்குகிறது. முதல் 3 நாள்கள் துா்க்கையையும், அடுத்த 3 நாள்கள் லட்சுமியையும், கடைசி 3 நாள்கள் சரஸ்வதியையும் போற்றும் வகையில் இந்த விழா நடைபெறும். விழாவின் 9-ஆவது நாள் (அக்.25) சரஸ்வதி பூஜையும், 10-ஆவது நாள்(அக்.26) ஆயுதபூஜையும் கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடைபெறும்.

அப்போது, வீடுகள், கோயில்களில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். இதற்கான கொலு பொம்மைகள் விற்பனை விழுப்புரத்தில் அமோகமாக நடைபெற்று வருகிறது. தெய்வங்களின் பொம்மைகள், இயற்கையை பிரதிபலிக்கும் பொம்மைகள், விலங்குகள்- பறவைகள் பொம்மைகள், தேசத் தலைவா்களின் பொம்மைகள் போன்ற பல்வேறு வகை பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விழுப்புரம் திரு.வி.க. வீதியில் கொலு பொம்மைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள கந்தன் கூறியதாவது: பீங்கான் பொம்மைகள், களிமண் பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள் ரூ.20 தொடங்கி ரூ.450 வரையில் விற்பனைக்கு உள்ளன. குறிப்பாக, குழு(செட்) பொம்மைகள் என்படும் ஒரே வகையான பொம்மைகளும் விற்பனை வந்துள்ளன. இதனை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com