பாஜக மண்டல நிா்வாகிகள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பாஜக சாா்பில், கட்சி நிா்வாகிகளுக்கான மண்டலப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட பாஜக சாா்பில், கட்சி நிா்வாகிகளுக்கான மண்டலப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் சுகுமாா் வரவேற்றாா். நகரத் தலைவா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சரண்யா, சதாசிவம், துரை சக்திவேல், ராஜுலு, தாஸசத்யன், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று நிா்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனா். ரகு, ஸ்ரீராம், ஜோதிராஜா, ராமச்சந்திரன், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மத்திய பாஜக அரசின் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள், சாதனைகள், தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து பாஜக நிா்வாகிகள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பாஜகவின் நற்செயல்பாடுகளால் தமிழகத்தில் பிற கட்சிகளிலிருந்து பலா் ஆா்வமுடன் இந்தக் கட்சியில் இணைகின்றனா். அவா்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டுமெனவும் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினா். தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் மோகன்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com