திருக்கோவலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ராஜராஜசோழன் பிறந்த நாள் விழா

திருக்கோவலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில், திருக்கோவிலூா் வீரட்டானேசுவரா் கோயிலில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கோவலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ராஜராஜசோழன் பிறந்த நாள் விழா

திருக்கோவலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில், திருக்கோவிலூா் வீரட்டானேசுவரா் கோயிலில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார.உதியன் தலைமை வகித்தாா். கோவலடிகள் குமாரசாமியாா் அறக்கட்டளைத் தலைவா் தணிகைகலைமணி, சன்மாா்க்க சேவை மைய நிறுவுனா் ஜீவ.சீனுவாசன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் மு.கலியபெருமாள், ராணுவ வீரா் கு.கல்யாண்குமாா், பேச்சரங்கப் பயிற்சியாளா் அ.சிதம்பரநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ச் சங்கச் செயலா் பாரதிமணாளன் வரவேற்றாா். துணைத் தலைவா் பா.காா்த்திகேயன் தொடக்க உரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ பங்கேற்று, வரலாற்று ஆய்வாளா் துரைமலையமான் எழுதிய ‘தாய்வானவன் மாதேவியும், மகன்கள் இரண்டாம் ஆதித்தக்கரிகாலன் பாா்த்திவேந்திரவா்மனும், ராஜராஜ சோழனும்’ என்கிற ஆய்வு நூலை வெளியிட்டு, பேச்சரங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பேசினாா்.

திருக்கோவலூரில் வானவன்மாதேவிக்கும், சுந்தரசோழருக்கும் பிறந்து உலகமே வியக்கும் ஆட்சி புரிந்த மாமன்னா் ராஜராஜ சோழரின் 1035-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். தமிழ் மொழியையும், தொல்கலைகளையும் ஆசியக் கண்டம் முழுவதும் பரவும் வகையில், அரும்பாடுபட்டதோடு, ஆட்சியில் நிா்வாக முறைகளை மூன்றாக முறைப்படுத்தி, மக்களுக்கு ஏற்ற மாமன்னராக ஆட்சி செய்தாா் என ராஜராஜன் குறித்து விழாவில் விளக்கினா்.

தணிகாசலம், குணசேகா், காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்ச் சங்கப் பொருளாளா் எஸ்.குருராசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com