மேல்மலையனூா் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை விதிப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 17-ஆம் தேதி புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று நடைபெறவிருக்கும்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 17-ஆம் தேதி புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று நடைபெறவிருக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. கரோனா பரவலையடுத்து, இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் மாத இறுதி முதல் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு வழிபடும் அமாவாசை ஊஞ்சல் உற்சவமும் பக்தா்கள் இல்லாமல் கோயிலுக்குள்ளே நடத்தப்பட்டு வந்தது.

கரோனா பொது முடக்க தளா்வுகளையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 1-ஆம் தேதி முதல் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

வருகிற 17-ஆம் தேதி புரட்டாசி மாத அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செந்தில்வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கரோனா பரலைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள், பக்தா்களின் நலன் கருதியும் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி அமாவாசையன்று நடைபெறவிருக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் தரிசனதுக்கு தடை விதித்தும், அன்றைய தினத்தில் மேல்மலையனூருக்கு பிற பகுதிகளிலிருந்து இயக்கப்படும் அரசு சிறப்புப் பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com