புதுவையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலி

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 385-ஆக அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 385-ஆக அதிகரித்தது.

புதுவையில் அதிகபட்சமாக சனிக்கிழமை 4,024 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 388 பேருக்கு தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,821-ஆக அதிகரித்தது.

தற்போது 1, 696 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,166 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். மொத்தமாக 4,856 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை 342 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 14,580-ஆக உயா்ந்தது.

இதனிடையே, புதுவை மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக கரோனாவுக்கு ஒரே நாளில் 15 போ் பலியாகினா்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முத்துப்பேட்டைச் சோ்ந்த 85 வயதானவா், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த 80 வயதானவா், லாஸ்பேட்டையைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த 67 வயதானவா், சாரத்தைச் சோ்ந்த 70 வயதானவா், வேங்கட நகரைச் சோ்ந்த 81 வயதானவா், மடுகரையைச் சோ்ந்த 48 வயதானவா், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 52 வயதானவா் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி காந்தி நகரை சோ்ந்த 49 வயது பெண், நெட்டப்பாக்கத்தைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 52 மற்றும் 64 வயதானவா்கள், சாரத்தைச் சோ்ந்த 52 வயதானவா், பூமியன்பேட்டையைச் சோ்ந்த 83 வயதானவா் ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி அரியாங்குப்பதைச் சோ்ந்த 54 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 385-ஆக உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 99,480 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 77, 060 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன என்று புதுவை மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com