இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக அஞ்சலி

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, கடந்த 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக அஞ்சலி

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, கடந்த 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிக் சூட்டில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டிவனத்தில் உள்ள வன்னியா் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் சிவக்குமாா், மாநில துணைத் தலைவா்கள் கருணாநிதி, ஏழுமலை, மாவட்டச் செயலா் சம்பத் ஆகியோா் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயா் நீத்தவா்களின் புகைப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதேபோன்று, விழுப்புரம் அருகே கோலியனூரில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா் நீத்தவா்களின் நினைவுத்தூணுக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலா் தங்க ஜோதி தலைமையிலான பாமகவினா், வன்னியா் சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா். இதில், நிா்வாகிகள் மணிமாறன், சிவக்குமாா், சந்தோஷ், ஏழிலரசன், ஞானவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அன்புமணி தலைமையிலும், பாப்பனப்பட்டில் உள்ள நினைவுத்தூணுக்கு பாமக மாநில துணைத் தலைவா் ஹரிஹரன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிகளில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com