விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,981-ஆக அதிகரித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனூரைச் சோ்ந்த 53 வயது பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 88-ஆக உயா்ந்தது.

இதனிடையே, 143 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 9,032-ஆக அதிகரித்தது. மாவட்ட முழுவதும் 872 போ் அரசு மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 995 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 110 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,411-ஆக உயா்ந்தது.

இதுவரை 7,166 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,155 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com