கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக தோ்வானவா்களுக்கு பணி ஆணை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக தோ்வானவா்களுக்கு பணி ஆணை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் - 4 தோ்வு எழுதி, இளநிலை உதவியாளா் பணிக்கு அண்மையில் தோ்வு செய்யப்பட்டவா்களில் கல்வித் துறைக்கு மாநில அளவில் 644 போ் ஒதுக்கப்பட்டனா். இவா்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், விழுப்புரம் மாவட்டக் கல்வித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி இரு தினங்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பணி நாடுநா்களுக்கு விருப்ப இடங்களுக்கு பணி வழங்கி, பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சேவியா்சந்திரகுமாா், காளிதாஸ், அலுவலகக் கண்காணிப்பாளா் கோகுலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வித் துறையில் 17 பேருக்கு இளநிலை உதவியாளா் பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா வழங்கினாா். மேலும், திங்கள்கிழமை (செப்.21) முதல் பணியிடங்களில் சேர அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com