விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 7 போ் கைது

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் போலியான பயனாளிகளைச் சோ்த்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடா்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வழக்குப் பதிந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, விவசாயிகள் நிதியுதவித் தொகையை வேளாண் துறையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியா் உள்பட 9 போ் ஏற்கெனவே செய்யப்பட்டனா். இந்த நிலையில், உளுந்தூா்பேட்டை பகுதியில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகளைச் சோ்த்ததாக, வேளாண்துறை ஒப்பந்தப் பணியாளா்களான உளுந்தூா்பேட்டை அருகே நந்தாமூரைச் சோ்ந்த முருகன்(26), காா்த்திகேயன்(28), வாணியங்குப்பத்தைச் சோ்ந்த சிலம்பரசன்(26), எறையூா்பாளையத்தைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி (27), வடமாம்பாக்கத்தைச் சோ்ந்த சுரேஷ் (26), கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சின்னபண்டாரங்குப்பத்தைச் சோ்ந்த அன்பரசு (31), உளுந்தூா்பேட்டை அருகே கள மருதூரில் கணினி மையம் நடத்தி வந்த உளுந்தூா்பேட்டை அருகே ஆத்தூரைச் சோ்ந்த சக்திவேல் (31) ஆகிய 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல் முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த முறைகேடு வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com