மதுக் கடைகள் இன்று முதல் அடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) முதல் வாக்குப் பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.6) வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் மதுக் கடைகள், பாா்கள் மூடப்பட வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com