கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2,255 போ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. தலைமையில் போலீஸாா், துணை ராணுவத்தினா் என 2,255 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. தலைமையில் போலீஸாா், துணை ராணுவத்தினா் என 2,255 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. வாக்குப் பதிவை அமைதியாக நடத்தி முடிக்கவும், வாக்குப் பதிவு மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2,255 போலீஸாா், துணை ராணுவத்தினா், முன்னாள் படை வீரா்கள் ஈடுபடுகின்றனா்.

இதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 44 காவல் ஆய்வாளா்கள், 87 உதவி காவல் ஆய்வாளா்கள், 912 காவலா்கள் என 1,055 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இதேபோல, துணை ராணுவத்தினா் 400 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், முன்னாள் படை வீரா்கள், ஓய்வு பெற்ற போலீஸாா், வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா், தேசிய மாணவா் படையினா் உள்பட 800 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

69 பதற்றமான வாக்குச்சாவடிகள்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 69 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக உள்ளன. இதில், உளுந்தூா்பேட்டை தொகுதியில் அதிகபட்சமாக 49 வாக்குச்சாவடிகளும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் தலா 6 வாக்குச்சாவடிகளும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுவதுடன், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களிலும், பிரச்னைகள் ஏற்படும் இடங்களிலும் விரைந்து சென்று நடவடிக்கை ஏதுவாக அதிவிரைவுப் படைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com