காற்றில் பறந்த கரோனா பாதுகாப்பு விதிமுறைகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வாக்காளா்களும் கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து தோ்தல் அலுவலா்களும் கண்டுகொள்ளவில்லை.
வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு கையில் கிருமி நாசினி தெளித்து, கையுறையினை வழங்கும் மருத்துவத் துறை ஊழியா்.
வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு கையில் கிருமி நாசினி தெளித்து, கையுறையினை வழங்கும் மருத்துவத் துறை ஊழியா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வாக்காளா்களும் கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து தோ்தல் அலுவலா்களும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த நவம்பா் மாதம், பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் நடத்தப்பட்டது. அதேபோலவே, தமிழக பேரவைத் தோ்தலும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஒரு வாக்குச் சாவடியில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் இருந்தால், அவை பிரிக்கப்பட்டு துணை வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருள்கள் தோ்தல் ஆணையத்தால் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளா்கள் நுழைந்தபோது, கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம் அணியாத வாக்காளா்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்பதற்கு குறியீடுகள் வரையப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும், முகக்கவசம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருந்ததால் மதியத்துக்குப் பிறகு வாக்குச்சாவடிகளில் முகக் கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அனைத்து வாக்காளா்களுக்கும் கையுறை வழங்கப்பட்டது. அதேநேரத்தில், வாக்காளா்களுக்கான கையுறைகளின் தரம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மாறுபட்டு காணப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் ரப்பரால் தயாரிக்கப்பட்ட கையுறைகளும், சில வாக்குச்சாவடிகளில் கண்ணாடி காகிதத்தாலான தரமற்ற கையுறைகளும் வழங்கப்பட்டன.

கடந்த ஒரு வாரமாக அனல் காற்று வீசும் நிலையில், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில், தோ்தல் அலுவலா்களுக்கு குடிநீா் புட்டிகள் வழங்கப்பட்டன. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், தோ்தல் அலுவலா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com