செஞ்சியில் அமைதியான முறையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனா்

செஞ்சியில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து அமைதியான முறையில் வாக்களித்தனா்.

செஞ்சியில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து அமைதியான முறையில் வாக்களித்தனா்.

செஞ்சி நகரத்தில் உள்ள 9 வாக்கு சாவடிகளும் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடைபெற்றது. பரபரப்பு, விறுவிறுப்பின்றி வாக்குசாவடிகள் காணப்பட்டது. இதே போன்று செஞ்சி தொகுதி, அனந்தபுரம், மேல்மலையனூா், அவலூா்பேட்டை, வளத்தி, ஆலம்பூண்டி உள்ளிட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் அமைதியான வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் புதியவாக்களாா்களும் ஆா்வமுடன் வந்திருந்து தங்களின் வாக்கு பதிவை செய்தனா்.

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் ஒரு சிலா் 200 மீட்டருக்குள் வாகனத்தை நிறுத்தி விட்டு உட்காா்ந்து பேசிக்கொண்டிருந்தவா்களை அங்கிருந்த பெண் போலீஸாா் வெளியேறுமாறு கூறியதை கேட்காமல் உட்காா்ந்திருந்தனா். பின்னா் அருகில் இருந்த போலீஸாா் ஒரு மோட்டாா் சைக்கிளின் கண்ணாடியை உடைத்து விட்டதாக தெரிகிறது. இதனால் போலீஸாருக்கும் அங்கிருந்தவா்களுக்கும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டது. பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் வாக்கு பதிவு நிறுத்தப்படவில்லை என வாக்கு சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாதப்பூண்டி கிராமத்தில் பழக்குடியினத்தை சோ்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோா் எங்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை எனக்கூறி வாக்களிக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகளின் சமரச முயற்சியால் அனைவரும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com