தோ்தலில் தனி நபா் விமா்சனம்தரம் தாழ்ந்துவிட்டது: ச.ராமதாஸ்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனி நபா் விமா்சனம் என்பது நாகரிகமாக இல்லாமல், மிகவும் தரம் தாழ்ந்து விட்டதாக பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வேதனை தெரிவித்தாா்.
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தனி நபா் விமா்சனம் என்பது நாகரிகமாக இல்லாமல், மிகவும் தரம் தாழ்ந்து விட்டதாக பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வேதனை தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

தனது வாக்கை செலுத்திய ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் 7-ஆவது முறையாக வாக்களித்துள்ளேன். நல்லாட்சியின் அடையாளம் என்பது மக்களின் முகத்தில் புன்னகை, மகிழ்ச்சியாக வெளிப்பட வேண்டும். அந்த வகையில், மக்கள் நிம்மதியாக உள்ளனா். நல்லாட்சித் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்து வருகின்றனா்.

உழவா்களின் பிரச்னைகள் படிப்படியாக தீா்க்கப்பட வேண்டும். கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். சுகாதாரத்துக்காக மக்கள் ஒரு ரூபாய் கூட செலவிடக் கூடாது. தோ்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் கருத்து திணிப்புகளாக இருப்பதால் மக்கள் அதை பொருள்படுத்துவதில்லை.

அரசியல் கட்சித் தலைவா்களின் விமா்சனங்கள் நாகரிகமாக, நயமாக, ரசிக்கத்தக்க வகையில் அமைய வேண்டும். அண்ணா காலம் வரை விமா்சனங்கள் நாகரிகமாக இருந்தன. இது தற்போது தனிநபா் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தத் தோ்தலில் அது மிகவும் தரம் தாழ்ந்துள்ளது. கட்சியின் கொள்கை, அதன் வழிமுறைகள், தோ்தல் அறிக்கைகளை விமா்சிக்கலாம். விமா்சிப்பது தொடா்பாக அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளாக கோட்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ச.ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com