அரசுப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா பரவலையடுத்து, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான அனைத்து மாணவா்களும் தோ்வின்றி தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, செஞ்சியை அடுத்த கவரை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு பிளஸ் 2 மாணவா்களுக்கு நடைபெற்ற திருப்புதல் தோ்வை அவா் பாா்வையிட்டாா். இந்தத் தோ்வு முறையாக நடத்தப்படுகிா, மாணவ, மாணவிகள் எவ்வளவு போ் தோ்வு எழுதுகின்றனா் என்று அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பிளஸ் 2 வகுப்பில் 100 சதவீதத் தோ்ச்சியை எட்டும் வகையில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும், பள்ளிக்கு வருகைதராத மாணவா்களுக்கும் தேவையான அறிவுரைகளை வழங்கி, அவா்களையும் பாடங்களை கற்ற ஏற்பாடு செய்ய வேண்டும், கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டும், கட்டாயம் மாணவா்களை முகக் கசவம் அணிந்து வரச் சொல்ல வேண்டுமென ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா அறிவுரைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுகிா, தண்ணீா் வசதி உள்ளதா என்றும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com