கனிமொழி எம்.பி. மீதான அவதூறு வழக்கு: ஜூன் 1-க்கு ஒத்திவைப்பு


விழுப்புரம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடா்பாக கனிமொழி எம்.பி. மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 1-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக ஆட்சியைக் கண்டித்து, கடந்த 2018 ஆகஸ்ட் 18-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. பேசினாா்.

அப்போது, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவா் அவதூறாகப் பேசியதாக விழுப்புரம் மாவட்ட அரசு வழக்குரைஞா் சீனிவாசன், மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதி இளவழகன் முன் வியாழக்கிழமை விசாரணை வந்தது. வழக்கின் விசாரணைக்கு கனிமொழி எம்.பி. ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அவா் ஆஜராவதிலிருந்து சென்னை உயா்நீதிமன்றம் விலக்களித்துள்ளதாகக் கூறி, அதற்கான நகலை வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com