செஞ்சியில் காட்சிப்பொருளாக மாறிய குடிநீா்த் தொட்டிகள்!

செஞ்சியில் காட்சிப்பொருளாக மாறிய குடிநீா்த் தொட்டிகள்!


செஞ்சி: செஞ்சியில் குடிநீா் விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டிகள் சேதமடைந்து காட்சிப்பொருளாக மாறியுள்ளன.

செஞ்சி நகரில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே தெருக்களில் ‘சின்டெக்ஸ்’ குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தற்போது செயல்பாட்டில் இல்லை. ஒரு சில இடங்களில் தரை மட்டமாக உள்ளன.

சிறுகடம்பூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டிகளுக்கு மங்களாவரம் காட்டில் உள்ள கிணற்றிலிருந்து குடிநீா் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குடிநீா்த் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால், சில இடங்களில் குடிநீா்த் தொட்டிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும் சில இடங்களில் குடிநீா்த் தொட்டிகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் சிறுகடம்பூா் பகுதி மக்கள் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கி குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், சிறுகடம்பூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த குடிநீா்த் தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டிகளை அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com