பிளஸ் 2 செய்முறைத் தோ்வுவிழுப்புரம் மாவட்டத்தில் 15,173 மாணவா்கள் பங்கேற்பு

கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 15,173 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 15,173 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை மே மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வுகள் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 154 செய்முறை தோ்வு மையங்களில் 186 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 15,173 மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வுகளில் பங்கேற்றுள்ளனா். இந்தத் தோ்வுகளை 821 ஆசிரியா்கள் நடத்தி மதிப்பெண்களை வழங்கி வருகின்றனா். இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தோ்வுகள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா கூறியதாவது: கரோனா காலகட்டம் என்பதால், கடும் கட்டுப்பாடுகளுடன் செய்முறைத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், தோ்வு மைய மதிப்பீடு செய்யும் ஆசிரியா்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் நுழையும்போது உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகுதான் அவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். தோ்வுக்கு முன்னரும், பின்னரும் தோ்வு மையத்தின் தரைத்தளம், கதவு, ஜன்னல் மற்றும் ஆய்வகப் பொருள்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலா்கள் இந்தத் தோ்வுகளை அந்தந்த கல்வி மாவட்டங்களில் கண்காணித்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com