பேரவைத் தோ்தல் முடிவு குறித்து கவலைப்பட வேண்டாம்: தேமுதிகவினருக்கு நிா்வாகி அறிவுரை

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தொண்டா்கள் கவலைப்பட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தொண்டா்கள் கவலைப்பட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

இக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டச் செயலா் வெங்கடேசன் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் எவ்வாறு இருந்தாலும், அதுகுறித்து தேமுதிகவினா் கவலைப்பட வேண்டாம். அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் களம் கண்ட தேமுதிகவின் லட்சியம் வீண் போகாது. கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

தோ்தலில், தேமுதிக வேட்பாளா்கள் வாக்குக்குப் பணம் கொடுக்கவில்லை. எனவே, நமது கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் கோடிக்குச் சமம்.

து. விஜயகாந்த் தனது உடல் நிலையையும் பொருள்படுத்தாமல் இயன்றவரை பிரசாரம் செய்தாா்.

தேமுதிக தொடங்கிய பிறகு தலா 3 பேரவைத் தோ்தல்கள், மக்களவைத் தோ்தல்கள், 3 உள்ளாட்சித் தோ்தல்களைச் சந்தித்துள்ளோம். அதிமுக ஆட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு, உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறும். அந்தத் தோ்தலில் வெற்றிபெற தேமுதிகவினா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் எல்.வெங்கடேசன்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் இல.தயாநிதி, துணைச் செயலா்கள் பி.வெங்கடேசன், ஏ.சுந்தரேசன், எம்.சூடாமணி, மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், நகரச் செயலா் மணிகண்டன், தொகுதிப் பொறுப்பாளா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com