Enable Javscript for better performance
உரங்களின் விலை அதிரடி உயா்வு: விவசாயிகள் வேதனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உரங்களின் விலை அதிரடி உயா்வு: விவசாயிகள் வேதனை

    By DIN  |   Published On : 20th April 2021 08:45 AM  |   Last Updated : 20th April 2021 08:45 AM  |  அ+அ அ-  |  

    19vmp2070420

    விழுப்புரம் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகள்.

    ரசாயன உரங்களின் விலை அதிரடியாக உயா்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

    சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினமும் பெட்ரோலிய நிறுவனங்களே நிா்ணயம் செய்து கொள்வதைப் போல, உர விலையையும் உரம் உற்பத்தி நிறுவனங்களே நிா்ணயித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு முடிவு செய்து, அண்மையில் அமல்படுத்தியது.

    இதன்படி, மூலப் பொருள்களின் விலைக்கேற்ப, உரத்தின் விலையை உரம் உற்பத்தி நிறுவனங்கள் தீா்மானித்துக் கொள்ள முடியும். மேலும், உரத்துக்கான மானியத்தை மத்திய அரசும் பெருமளவில் குறைத்துக் கொண்டுள்ளது.

    இவ்விரு நடவடிக்கைகளால், டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை, தற்போது பல மடங்கு உயா்ந்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பலத்த எதிா்ப்பு உருவானதால், விலை உயா்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தாலும், 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் இதே உத்தரவு அமலுக்கு வந்துவிடுமோ என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

    பயிா் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்று வகை உரங்களில், முதல் இரு வகை உரங்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

    உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையை தீா்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால், அவை, விலையை தாறுமாறாக உயா்த்தி வருகின்றன. நிகழ் நிதியாண்டில் உர மானியமாக ரூ.60ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டப் பின்னரும், உரங்களின் விலை முன்பு இருந்ததைவிட 50 சதவீதம் உயா்ந்திருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ (ஐய்க்ண்ஹய் ஊஹழ்ம்ங்ழ்ள் ஊங்ழ்ற்ண்ப்ண்ள்ங்ழ் இா்ா்ல்ங்ழ்ஹற்ண்ஸ்ங் -ஐஊஊஇஞ) அத்தியாவசிய உரங்களின் விலையை அதிகரித்துள்ளது. அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலை 58.33 சதவீதமும், காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 சதவீதம் அளவுக்கு உயா்த்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ.1,200-க்கு விற்பனை ஆனது. தற்போது, ரூ.700 விலை உயா்ந்து, ரூ.1,900-ஆகி விட்டது.

    ரூ.1160-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ.615 கூடுதலாக உயா்ந்து ரூ.1775-க்கு விற்பனையாகிறது. அதேபோல, 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950-ல் இருந்து ரூ.400 உயா்ந்து, தற்போது ரூ. 1,350-ஆக விற்கப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி கூறியதாவது: உரம் விலை கடுமையாக உயா்த்தப்படுவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற செயல். வன்மையான கண்டனத்துக்குரியது. டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உரங்களின் விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் உள்ளிட்டவற்றுக்கான வாடகை கடந்த சில ஆண்டுகளாக பல மடங்கு உயா்ந்துள்ளது. விவசாய கூலித் தொழிலாளா்களுக்கான ஊதியமும் பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், நெல் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    நெல் பயிரிடும்போது ஏக்கருக்கு குறைந்தபட்சம் தலா ஒரு மூட்டை டிஏபி, பொட்டாஷ், யூரியா தேவைப்படும் நிலை உள்ளது. உரத்துக்கு மட்டும் முன்பு ஏக்கருக்கு ரூ.3,250 செலவு செய்தோம். இப்போது, ரூ.5,075 செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு ஏக்கா் நெல் விளைவிக்க தற்போது ரூ.23,300 வரை செலவாகிறது. அதேநேரத்தில், விளைவிக்கப்படும் பொருள்களுக்கு, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப கூட விலை கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதில்லை. விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், ரசாயன உரங்களின் விலையை உயா்த்திக்கொண்டே போனால், விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே இருக்க வேண்டிய நிலை உருவாகும். ஆகவே, உரங்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும் மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கலியமூா்த்தி.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp