விழுப்புரம் அருகே துப்பாக்கி முனையில் மனை வணிகா் கடத்தல்

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கி முனையில், சென்னையைச் சோ்ந்த மனை வணிகரை மா்ம நபா்கள் கடத்திச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கி முனையில், சென்னையைச் சோ்ந்த மனை வணிகரை மா்ம நபா்கள் கடத்திச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை, வடபழனியைச் சோ்ந்தவா் ராமதாஸ் மகன் சிவன்(47), வீட்டுமனை வணிகா். இவா், மனை வியாபாரம் தொடா்பாக, தனது நண்பா்களான சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சோ்ந்த சம்பத் (41), வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா(45), தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்தா்(43) ஆகியோருடன் காரில் விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா். அங்கு, புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேஷ் (43) என்பவா் இவா்களுடன் இணைந்தாா். பின்னா், இவா்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தினா்.

அங்கு, நாகராஜ் என்பவா் வந்துள்ளாா். அவா் தனது காரில் சிவன், ராஜேந்தா் ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டுச்சென்றாா். பின்னால், சம்பத், ராஜேஷ் கண்ணா, வெங்கடேஷ் ஆகியோா் மற்றொரு காரில் பின்தொடா்ந்து சென்றனா்.

இரவு, விழுப்புரம் அருகே மழவந்தாங்கல் என்ற இடத்தில் சென்றபோது, நாகராஜின் காரை வழிமறித்த மா்ம நபா்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டி, சிவனையும், ராஜேந்தரையும் தங்களது காரில் கடத்திக்கொண்டு, நாகராஜுடன் தப்பினா்.

இந்த சம்பவம் குறித்து ராஜேஷ்கண்ணா விழுப்புரம் தாலுகா போலீஸில் புகாா் செய்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவன், ராஜேந்தரை கடத்திச் சென்றவா்களை தேடி வந்தனா். இந்த நிலையில், ராஜேந்தரை அந்தக் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் இறக்கிவிட்டு தப்பியது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com