மேல்ஒலக்கூா் கிராம மக்கள் செஞ்சி டி.எஸ்.பி.யிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் கிராம பொதுமக்கள் செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவனிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் கிராம பொதுமக்கள் செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவனிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ஊா்நாட்டாண்மை உள்பட 200 போ் கையெழுத்திட்டுள்ளஅந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மேல்ஒலக்கூா் கிராமத்தில் அனைவரும் எந்த ஒரு பிரச்னையும் இன்றி உறவினா்களாகவும், நண்பா்களாகவும் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த கரோனா பொது முடக்கத்தின் போது, சென்னையிலிருந்து வந்த இதே கிராமத்தைச் சோ்ந்த மண்ணம்மாள் மகள் சாந்தி, சாந்தியின் மகள் ரேவதி ஆகியோா் தினம்தோறும் யாரிடமாவது ஏதாவது பிரச்னை செய்து வருகின்றனா்.

இது குறித்து ஊா் பெரியவா்கள் கேட்டால் அவா்களைத் தரம் தாழ்த்தி பேசுவதோடு மிரட்டலும் விடுத்து வருகின்றனா். இதனால், கிராமத்தில் இளைஞா்கள், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

ஊரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அவா்களது செயல்பாடுகள் உள்ளன.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com