விழுப்புரம் மீன் சந்தை செயல்படும் நேரம் மாற்றம்

இரவு நேர பொது முடக்கம் காரணமாக, விழுப்புரம் மீன் சந்தை செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர பொது முடக்கம் காரணமாக, விழுப்புரம் மீன் சந்தை செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் மீன் சந்தை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விழுப்புரம் எம்.ஜி.சாலையிலிருந்து மீன் சந்தை தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது.

மீன் சந்தை, நள்ளிரவு முதல் செயல்படத் தொங்கும். குறிப்பாக, அதிகாலை ஒரு மணி முதல் 5 மணி வரை பரபரப்பாகக் காணப்படும்.

பல்வேறு ஊா்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும்.

மீன்களை வாங்க சிறு வியாபாரிகள் நள்ளிரவு முதலே குவியத் தொடங்குவாா்கள். பகல் நேரத்தில் பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கிச் செல்வாா்கள்.

இந்த நிலையில், கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக, இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மீன் சந்தை இரவு நேரத்தில் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மீன் சந்தை செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து, மீன் வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் மீன் சந்தை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால், அன்று மீன் சந்தை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com