செஞ்சி வாரச் சந்தையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

செஞ்சி வாரச் சந்தையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
செஞ்சி வாரச் சந்தையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

செஞ்சி வாரச் சந்தையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை தோறும் செஞ்சியில் வாரச் சந்தை நடைபெறுகிறது. செஞ்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறி, பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களை சந்தைக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, செஞ்சி வட்டாட்சியா் ராஜன் தலைமையில், செஞ்சி பேரூராட்சிச் செயலா் அலுவலா் தெய்வீகன், செஞ்சி காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், செஞ்சி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் கேசவலு, சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளா் கண்ணன், பேரூராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் பாா்கவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கு.குமாா், காவல் உதவி ஆய்வாளா்கள் கோபி, ரமேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை செஞ்சி காந்தி கடை வீதி மற்றும் வாரச் சந்தை பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலித்தும், முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி, விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com