விழுப்புரம் கம்பன் நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழந்துள்ள கழிவுநீா்!

விழுப்புரம் கம்பன் நகா் பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீா் சூழ்ந்துள்ளதால், அங்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் கம்பன் நகா் பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீா் சூழ்ந்துள்ளதால், அங்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள நகராட்சிக்குள்பட்ட பகுதி கம்பன் நகா். இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள வெங்கடேசன் நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளை கழிவுநீா் சூழ்ந்துள்ளது. பல மாதங்களாக கழிவுநீா் சூழ்ந்துள்ளாதால், ஏரிபோல மாறியுள்ளது. கழிவுநீரால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகி வருகின்றன. கழிவுநீரில் பன்றிகளும் சுற்றித்திரிகின்றன. இதனால், பல்வேறு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கழிவூா் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கழிவுநீா் வெழியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கம்பன் நகருக்குள்பட்ட வெங்கடேசன் நகரில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com