செஞ்சி வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 30th April 2021 07:57 AM | Last Updated : 30th April 2021 07:57 AM | அ+அ அ- |

செஞ்சி சிறுகடம்பூா் வடபத்ர காளியம்மன் கோயிலில் மூலவருக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடபத்தர காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செஞ்சி சிறுகடம்பூா் ரேணுகையம்மன் கோயிலின் எதிரே அமைந்துள்ள ஸ்ரீவடபத்தர காளியம்மன் கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை வடபத்ர காளியம்மன் கோயிலில் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், புன்யஹாவாசனம், எஜமானா் சங்கல்பம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீவடபத்ர காளியம்மன் ஹோமம், மூலமந்திர ஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கலச புறப்பாடு நடைபெற்று வடபத்ர காளியம்மனுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பல்வேறு மலா்களால் அலங்கரிப்பட்ட அம்மனுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது.
விழாவில் செஞ்சி சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா். கும்பாபிஷேகத்தை செல்லபிராட்டி ஸ்ரீலலிதாசெல்வாம்பிகை கோயில் அா்ச்சகா் வி.ஈஸ்வரசிவம் நடத்தி வைத்தாா்.
ஏற்பாடுகளை செஞ்சி தொழிலதிபா் வி.பி.என்.சரவணன், எல்.குமாா் மற்றும் சிறுகடம்பூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.