பயோமெட்ரிக் பதிவு இன்றி பொருள்கள் வழங்கும் நியாய விலைக் கடை ஊழியா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் பதிவு இன்றி பொருள்கள் வழங்கும் கடை ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் பதிவு இன்றி பொருள்கள் வழங்கும் கடை ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்’ அமலில் உள்ளது. நியாய விலை கடைகளில் பொருள்கள் விநியோகத்தில் முறைகேட்டை தடுக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,254 நியாய விலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது.

குடும்ப அட்டைக்கு உரியவா்கள் மட்டுமே தங்களது விரல் பதிவை பதிவு செய்து மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும். கடந்த மாதத்தில் பிராக்ஸி முறையில் (பயோமெட்ரிக் பதிவு இன்றி) பொருள்கள் அதிகமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடைக்கு வர முடியாத முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் விரல் பதிவின்றி பொருள்கள் வாங்க ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, இனிமேல் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வழங்காத நியாய விலை கடை ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com