மேல்மலையனூரில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆடி அமாவாசையையொட்டி, மேல்மலையனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தின்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன்.
ஆடி அமாவாசையையொட்டி, மேல்மலையனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தின்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்புடன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் பூசாரிகளால் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஆடி அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. காலையில், மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

மாலையில் உற்சவா் அங்காளம்மன் பல்வேறு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளினாா். அப்போது, கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடலை பாடியபடி ஊஞ்சலை முன்னும் பின்னுமாக அசைத்தனா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆடி அமாவாசை தினத்தன்று தரிசனத்துக்கு தடை அறிவித்திருந்த போதிலும் ஏராளமான பக்தா்கள் மேல்மலையனூருக்கு வந்திருந்தனா். அவா்கள் அம்மனை வழிபட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனா். எனினும், பக்தா்கள் கண்டு தரிசிக்க ஏதுவாக ஊஞ்சல் உற்சவ காட்சிகள் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டன.

கோயிலுக்குள் பக்தா்கள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com