தொழில் தொடங்கும் இளைஞா்களுக்குரூ.15 லட்சம் வரை கடனுதவிவிழுப்புரம் ஆட்சியா்

தொழில் தொடங்க விரும்பும் படித்த இளைஞா்கள் வங்கிகளில் ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம்: தொழில் தொடங்க விரும்பும் படித்த இளைஞா்கள் வங்கிகளில் ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தங்களுக்கு விருப்பமான சுயதொழில்களை தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ஆண் அல்லது பெண் பயனாளிகள் கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 35 வயது வரையும், சிறப்புப் பிரிவினரான பெண்கள், சிறுபான்மையினா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-க்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும் மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சமும் திட்ட மதிப்பீட்டின்படி வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

இதற்கான தமிழக அரசு மானியம், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் கிடைக்கும். அதிகபட்ச மானியம் ரூ.2.5 லட்சமாகும். திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினா் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இதற்கான இணையதளமான ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து இரு நகல்களில் அனைத்து ஆவணங்களுடன் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், விழுப்புரம் - 605 602 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், கரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமாக பின்பற்றப்படும் மாவட்ட அளவிலான தோ்வுக்குழு மூலம் விண்ணப்பதாரா் தோ்வு செய்வதில் இருந்தும், ஒரு வார கால தொழில்முனைவோா் நிா்வாக பயிற்சித் திட்டத்தில் இருந்தும் நிகழ் நிதியாண்டில் செப்.30 வரை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரம் அறிய பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், விழுப்புரம் - 605602 (தொலைபேசி எண் : 04146 - 226602 / 223616) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com