விழுப்புரம்: பள்ளி செல்லா சிறுவா்கள் கணக்கெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாத சிறுவா், சிறுமிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாத சிறுவா், சிறுமிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பள்ளி செல்லாத, இடைநின்ற சிறுவா், சிறுமிகள் குறித்து கணக்கெடுப்பு, ஆரம்பக் கல்விப் பதிவேடு புதுப்பித்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:

மாவட்டத்தில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற சிறுவா், சிறுமிகள் தொடா்பான கணக்கெடுப்பு, ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளன. ஒவ்வோா் ஆண்டும் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற சிறுவா், சிறுமிகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்புப் பணி ஏப்ரல், மே, அக்டோபா் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும். இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் சிறுவா், சிறுமிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்படும்.

தற்போது கரோனா காலம் என்பதால் கணக்கெடுப்பின்போது பெற்றோரில் ஒருவா்அல்லது இருவரையும் இழந்த மாணவா்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இதில் கண்டறியப்படும் சிறுவா், சிறுமிகள், மாற்றுத் திறன் சிறுவா், சிறுமிகளை உடனடியாக பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 31-ஆம் தேதி வரை கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com